paramathas - Poems---

Home
Flams
Elam Poems
Poems New
Poems
Poems-
Poems--
Poems---
Poems---------
Poems----
Poems--------
poems------
poems-------------
கருத்து
தொடர்புக்கு
ஒலிவடிவில்.....
காதலர்கள் நகைச்சுவை
photos poems
interview



 

பிடிக்கும்

பிடிக்கும் மழலையின் அழுகை பிடிக்கும்  

மனம் விட்டுப் பேசுபவர் பிடிக்கும்

மறைந்திருந்து பார்க்கும் பெண்கள் பிடிக்கும்

மலர்தனி இதழில் முத்தமிடப் பிடிக்கும்

நீண்டதேர் கூந்தல் பிடிக்கும்

உன் நிறம் கொண்ட இதழ் பிடிக்கும்

உன் முகத்தில் தோன்றும் பருக்கள் பிடிக்கும்

அதைக் கிள்ளிப்பார்க்கப் பிடிக்கும்

உன் சுவாசம் தனில் உள்வாங்க பிடிக்கும்

உன்னில் இருக்கும் அங்கங்கள் ஒவ்வொன்றும் பிடிக்கும்

உனது காதலைத்தவிர.....

இறப்பும் பிறப்பும்

வாடா வாடா காதல் நேசா....

என் வயசு வெளுக்குது காதல் நேசா...

எந்த கிரகத்தில் நீ இருக்கிறாய்......

எப்போ பூமிக்கு நீ வருவாய்...

பூமியும் எனைப்போல் தவமிருக்கு.....

காற்றும் என்னைப்போல் தவமிருக்கு......

கடலும் எனைப்போல் தவமிருக்கு......

என் இறப்பும் பிறப்பும் உன்  பொறுப்பு.....

நேசித்தேன்  

இரவை நேசித்தேன் - அது

விடிந்து போனது.

பகலை நேசித்தேன் -அது

இரவாகி போனது. 

மலரை நேசித்தேன் - அதுவும்

உதிர்ந்து போனது. 

நிலவை நேசித்தேன் - அதுவும்

மறைந்து போனது. 

உன்னை நேசித்தேன் - நீயும்

பிரிந்து போகிறாய்.!!!!
       

காதல் வருமா?

காலம் காத்திருந்தால், என்றாவது வசந்தம் வரும்

பாலைவனம் திரிந்தால், எங்காவது சோலை வரும்

கற்பனை செய்தால், எப்போதாவது கவிதை வரும்

நான் என்ன செய்தும், உன் காதல் வரவில்லையே?

 நீ என்றால் உன் என்று அர்த்தம்

உன் வாழ்க்கை உன் கையில்

உன் முன்னேற்றம் உன் கையில்

உன் எதிர்காலம் உன் கையில்

மொத்தமாக நீ எனக்கு மட்டும்


Aujourd'hui sont déjà 26868 visitors (63767 hits) Ici!
Ce site web a été créé gratuitement avec Ma-page.fr. Tu veux aussi ton propre site web ?
S'inscrire gratuitement