paramathas - interview

Home
Flams
Elam Poems
Poems New
Poems
Poems-
Poems--
Poems---
Poems---------
Poems----
Poems--------
poems------
poems-------------
கருத்து
தொடர்புக்கு
ஒலிவடிவில்.....
காதலர்கள் நகைச்சுவை
photos poems
interview



 

 

வணக்கம்  பா.தாஸ் பல சிரமங்களுக்கு மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வந்ததிற்கு இனணய குடும்பம் சார்பாக நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு பேட்டிக்குள் நுழைகின்றோம் இனணய குடும்பம்+ நான்

வணக்கம் பா:தாஸ் இனணய குடும்பம்:  பா.பரமதாஸ் என்னும் பெயரை மாற்றி
பா.தாஸ் என பெயர் இட்டமைக்கான சிறப்புக்காரணங்கள் ஏதாவது உள்ளனவா?
நீங்கள் பிறந்த திகதி என்ன?
நீங்கள் பிறந்த ஊர் ஏது?

நான்:   வணக்கம் இனணய உறவுகளே…என்னையும் ஒரு கவிஞனாக
மதித்து கேள்வி கேட்டமைக்கு
எனது முதல் நன்றிகள்.

என்பது எனது சொந்தப் பெயர்
எனக்கு நானே வைத்துக் கொண்ட பெயர்தான்
பா.தாஸ்

பா.தாஸ்  என்ற பெயரை
 எனக்கு வைத்துக் கொள்ளக் காரணம் அதிகமானவர்களுக்கு பிடித்த பெயராக இருக்கவேண்டும்
அதேசமயம்
அழகான பெயராகவும் இருக்க வேண்டும் எனக்கும் பிடித்த பெயராக
இருப்பதல்

பா.தாஸ்  என்ற பெயரை எனக்கு வைத்துக் கொண்டேன்.பிறந்த திகதி: 07.06.1989
பிறந்த ஊர்: யாழ் மாவட்டத்தில் உள்ள பருத்துத்துனற

இனணய குடும்பம்:  நீங்கள் எப்போது கவிதை எழுத ஆரம்பித்தனீங்கள் என எமது இனணய குடும்பத்தினர் உங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?

நான்: நான் கவிதை என எழுத ஆரம்பித்தது எப்போது என்று கேட்காமல் எப்போது நீங்கள் கிறுக்க ஆரம்பித்னீங்கள் என்று கேட்டிருக்கலாம் நான் கிறுக்க ஆரம்பித்தது பதினைந்து வயதில் பாடசாலை மேசையில் கிறுக்கி ஆசியரிடம் பேச்சு வாங்கி அதன் பின் பாடசாலையில் கரும்பலகையில் எழுதி அதை அதிபர் வாசித்து யார் எழுதியது என்று கேட்டார் அதை நான் என்று சொன்னபோது அதிபர் சொன்ன முதல் வார்த்தை நன்றாக எழுதி இருக்கிறாய் என்றார் அதில் இருந்து கவிதை எழுத ஆரம்பித்தேன் அதன் பின் எனது கைப்பட ஒரு புத்தகம் அமைத்து எனது நண்பர்கள் பலருக்கு காட்டி அதில் இருந்து ஆரம்பித்தேன் எனது கற்பனைகளை கவிதையாய் வரைய ஆரம்பித்தேன்

இனணய குடும்பம்:  தமீழிழத்தில் உங்களை மிகவும் கவர்ந்தது என்ன?
கொடிய யுத்தம் காரணமாக உங்களை மிகவும் பாதித்த சந்தர்ப்பம் என்று சொல்லுமளவிற்கு ஏதாவது இருக்குதா?தற்போது நீங்கள் தமீழத்தில் தான் இருகிறீங்களா? அல்லது வேறோரு நாட்டில் இருகின்றீர்களா?

 நான்: தமிழிழத்தில் என்னைக் கவராதது என்று எதுவுமில்லை.

சொந்த நாட்டைவிட்டு வந்தாலும்
சொந்த நாட்டுக்காக பிரான்சில்
வசித்து வருகிறேன்.

இனணய குடும்பம்: உங்கள் பள்ளி நாட்கள் அதில் நீங்கள் நண்பர்களுடன் சேர்ந்து செய்த குழப்படிகள்
வாங்கிய அடிகள் என்பவற்றை எங்கள் உறவுகளிடம் பகிர்ந்து கொள்ளமுடியுமா?
 

நான்: யாராலும் மறக்க முடியாத அற்புதமான காலம் என்றால்
அது பள்ளிக்கூடக்காலம் மட்டும்தான். சொல்லக்கூடிய
அளவுக்கு எந்தக் குளப்படியும் செய்யவில்லை அதற்காக
இன்று கவலைப் படுகிறேன்.


இனணய குடும்பம்:  புலம்பெயர்ந்த நாட்டில் உங்களுக்கு மறக்க முடியாத சம்பவங்கள் நடந்திருக்கின்றதா?
அதையிட்டு எங்கள் உறவுகளுக்கு கூறமுடியுமா?

நான்:நான் புலம்பெயர்ந்து வசிக்கும் நாடான பிரான்சிலும்
எனக்கு நிறைய மறக்கமுடியாத சம்பவங்கள் நடந்திருக்கிறது


இனணய குடும்பம்: காதலை பற்றி எல்லாரும் என்னவோ கதைக்கினம் காதலை பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன?காதல் பற்றி ஒரு விமர்சனம் கேட்டால் உங்கள் பதில் எது??
யாரையாவது காதலித்த அனுபவம் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

 இது வரை உங்களுக்கு எத்தனை பேர் காதல் கடிதம் தந்தவை என்பதையும் எங்கள் உறவுகளோடு பகிர்ந்து கொள்ளமுடியுமா?

நான்: காதல் என்பது ஒரு வார்த்தைதான்
ஆனால் அதை யாராலும் மொழிபெயர்த்திட முடியாது
படிக்க வேண்டிய மிக அற்புதமான மிக உன்னதமான
மிகப் புனிதமான காவியம் அது.காதலைக் கற்றுக் கொள்ள முடியும்
விளங்கப்படுத்த முடியாது.காதல் கவிஞர்களை உருவாக்கிறது
கவிஞர்கள் காதலர்களை உருவாக்கிறார்கள்.வாழும் உலகில்
வாழ்வதற்கான புது
உலகம் வேண்டுமா
காதலிக்க ஆரம்பியுங்கள்.

(@) இதுவனர
காதல் கடலில் நீர் நிரம்பவில்னல நானும் நீந்தவும் நினைக்கவில்லை
காரணம் காதல் எனும் மது அருந்தும் போது இருக்கும் நிதானம் அதை அருந்திய பின் இருப்பது இல்லை என அறிந்தால் ஆனாலும் நான்
  காதல் மது அருந்த நினைக்கிறேன் மது விற்கும் இடம் தெரியமல்
இன்னும் தேடிக்கொன்டு இருக்கிறேன்::::::::

(@) காதல் கடிதம் கொடுத்து காதலிக்கும்
காலத்தில் நான் இல்லையென்பதால் எனக்கு
இதுவரை யாரும் தரவில்லை காதல் கடிதம்

உலகத்தைவிட்டு தள்ளி வைத்தாலும்
உயிர் உள்ளவரை உங்களோடு வரும் காதல்..

இனணய குடும்பம்:  வாழ்கையை நீங்கள் எவ்வாறு எடுத்து கொள்வீர்கள்?வாழ்கையில் மறக்கமுடியாத நாள் என்று ஏதாவது இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?வாழ்கையில் இதுவரை சாதித்தது என்ன? இனியும் சாதிக்க போவது என்ன?
 

நான்:வாழ்க்கை என்பது
எனக்கு பாடப்புத்தகம்

தினமும் பலவற்றை
கற்றுத் தருகிறது கசப்பானவற்றையும்
ஆர்வத்தோடு படிக்கும்
மாணவன் நான்அதனால்
வாழ்க்கை என்னை வெறுத்தாலும்
வாழ்க்கையை நான் வெறுப்பதில்லை.

இனணய குடும்பம்:  தெய்வ நம்பிக்கை இருக்கிறதா?
உங்கள் முன் கடவுள் தோன்றி உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் நீங்கள் என்ன கேட்பீங்க?அதற்கான காரணம் என்ன?

நான்:என்னை விட தெய்வம் என்னை நம்புகிறது
என்பதை நம்பும் அளவுக்கு தெய்வ நம்பிக்கை
இருக்கிறது.

தெய்வம் தோன்றினால்…
யாருக்கும் தொந்தரவு இல்லாத
மரணம் வேண்டும் எனக் கேட்பேன். என் மரணம் கூட யாரையும்
தொந்தரவு பண்ணக் கூடாது
என்பதுதான் காரணம்
.

இனணய குடும்பம்: நீங்கள் கவிதை எழுதக் காரணம் என்ன?
நீங்கள் எழுதிய முதல் கவிதை எது?

நான்:கவிதை எழுதக் காதல்தான் காரணம்
ஆமாம் கவிதை மேல் காதல்
.முதல் கவிதை
எதுவென்று    நினைவில்லை::::::::::


இனணய குடும்பம்: உங்கள் அதிகமான கவிதையில் சோகம் தெரிகிறதே ஏன்?
அதிகமாக உங்கள் கவிதைகளைப் படிக்கும்போது
அனுபவிச்சு எழுதியது போல் தெரிகிறதே உண்மையா?
நீங்கள் எழுதிய கவிதைகள் பல அதில் உங்கள் மனதில் என்றும் அழியாத கவிதை என்றால் எதை கூறுவீர்கள்??

நான்: காதலை  பற்றி
கவிதை எழுத வேண்டும்
என்றால் அதில்   இருக்கும்
வலியையும்  பற்றியும் எழுத வேண்டும்
என்று நினைப்பவன் நான்.

அதை
சோகம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

கவிதை தான் கற்பனை
என்று காட்டிக் கொடுத்தால்
அந்த கவிதைக்கு அழகிருக்காது.
“உனக்குள் நான்
எனக்குள் நீ
நமக்குள் நாம்
சொல்லும் கவிதை
நட்பு பா.தாஸ்

இனணய குடும்பம்:  உங்களைக் கவர்ந்த உங்கள் கவிதை இல்லாத கவிதை எது?
உங்களுக்கு பிடித்த:படம்,பாடல்,கவிஞர்,பாடகர்,பாடகி
,புத்தகம்??

நான்:கவிஞர்கள்: வைரமுத்து::::::::பவிஜய்

படம்:   கில்லி; வசந்தமாளிகை
பாடல்:  உன்னைப்பார்த்த பின்பு நான் நானகவில்லை

பார்க்காத என்னை பார்க்கத

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்….............
பாடகர்: பாலசுபிரமணியம்

இனணய குடும்பம்:  கவிதை எழுதுவது மட்டும்தான் உங்களது பொழுது போக்கா?

நான்: குளியல் அறையில் பாடுவது
கொண்டடங்களில் ஆடுவது
எந்த புத்தகம் என்றாலும்
படிப்பது………
 

இனணய குடும்பம்:  எனது கேள்விகள் உங்களை சிரமப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
எங்களுக்காக உங்களது நேரத்தை செலவழித்தமைக்கு மிக்க நன்றி.இறுதியாக சிறிய விண்ணப்பம் நீங்கள் நன்றாக கவிதை எழுதுவீங்கள் என்று எங்களுக்கு தெரியும் !!
 எனக்காக ஒரு கவிதை எழுத முடியுமா??

நான்:கருவறியில் பிள்ளை சுமக்கும் தாய் சிரமம் என்று நினைப்பதில்லை..
பொன்னான நேரங்களை சேகரித்த நேரம் இது.
எனவே நான் தான் நன்றி சொல்லவேண்டும்.

உங்களுக்கான கவிதை.. “உங்கள் பெயரும்
கவிதைதான் ஆனால்
உங்கள் பெயர் போல்
இனிப்பதில்லை எந்தக்
கவிதையும்”போதுமா..

:::::::::::::::::::::::::::::::::::::மிக்க நன்றி இனணய  உறவுகளே:::::::::::::::::::::::::::::::::::::::::

 

Aujourd'hui sont déjà 26488 visitors (63005 hits) Ici!
Ce site web a été créé gratuitement avec Ma-page.fr. Tu veux aussi ton propre site web ?
S'inscrire gratuitement